வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு! – மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில், வீடியோ கேம் மற்றும் இரண்டு புதிய விளம்பர வீடியோக்களை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கோவிட் -19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான சரியான கருவிகள் மற்றும் நடத்தைகளை மக்களுக்கு கற்பிப்பதற்கான ஒரு புதிய மற்றும் மிகவும் ஆக்கபூர்வமான வழி என்று தெரிவித்துள்ளார். மேலும், சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தொற்றுநோயிலிருந்து தப்பிக்க நினைவூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.