கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஓரிருநாளில் அனுமதி அளிக்கப்படவுள்ளதாக தகவல்!
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்தியாவில் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுபடுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்த வைரசை தடுக்க தடுப்பு மறுத்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், ஆஸ்டராச்செனிகா நிறுவனமும் இணைந்து, கொரோனா தடுப்பு தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து வருகின்றது. இதனையடுத்து, இந்த கோவிஷீல்டு தடுப்பூசிக்கு, இந்தியாவில் ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசின் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.