மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை..!
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியமைதிப்பதில் சிவசேனா , பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே சிக்கல் ஏற்பட்டு உள்ளது.இதனால் அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.ஆனால் போதிய ஆதரவு இல்லாததால் பாஜக நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சிக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார்.இதனால் சிவசேனா தேசியவாத காங்கிரஸ் கட்சி , காங்கிரஸ் கட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கிடையில் சிவசேனா கட்சி ஆளுநரிடம் ஆட்சியமைக்க காலஅவகாசம் நீட்டிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
ஆனால் ஆளுநர் அதற்க்கு மறுப்பு தெரிவித்தார்.இந்நிலையில் நேற்று ஆளுநர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பு விடுத்தார்.தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு இன்று இரவு 08.30 மணி வரை அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இதை தொடர்ந்து இன்று மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்த மத்திய அரசுக்கு பரிந்துரை செய்து ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அறிக்கை வெளியிட்டு உள்ளார் . அரசியல் சாசனசப்படி ஆட்சியாயமைக்க முடியாத நிலை உள்ளதால் அம்மாநில ஆளுநர் அறிக்கை விடுத்து உள்ளார்.
Raj Bhavan Press Release 12.11.2019 3.16 PM pic.twitter.com/qmlQA6ghBR
— Governor of Maharashtra (@maha_governor) November 12, 2019
மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க எந்த கட்சிகளுக்கும் தனிபெருபான்மை இல்லாததால் மகாராஷ்டிரா ஆளுநர் இந்த முடிவு என தகவல் வெளியாகி உள்ளது.