ஆளுநர் விவகாரம் – முதலமைச்சருக்கு கேரள அரசு ஆதரவு!

Default Image

ஆளுநர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என கேரளா முதல்வர் கடிதம்.

ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்து, பதில் கடிதம் எழுதியுள்ளார்.

கேரள முதல்வர் கடிதம்:

அந்த கடிதத்தில், முதலமைச்சர் முக ஸ்டாலினின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிப்போம். ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம். அரசின் செயல்பாட்டை குறைக்கும் வகையில் கூட்டாட்சி கொள்கைகளுக்கு ஆளுநர்கள் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

தீர்மானம் பரிசீலிப்பு:

ஆளுநருக்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற பரிசீலிப்போம் எனவும் பினராயி விஜயன் உறுதி அளித்துள்ளார். ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஆளுநருக்கு எதிரான விஷயத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கான முன்மொழிவு மிகவும் பாராட்டத்தக்கது. மசோதாவுக்கு ஒப்புதல் தர கால அவகாசம் குறிப்பிடவில்லை, என்றாலும் ஆளுநர்கள் நியாயமாக இருக்க வேண்டும்.

ஆளுநரால் தொல்லை:

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கருத்துக்கள் கேரளாவில் நாங்கள் எடுத்துள்ள நிலைப்பாட்டுடன் ஒத்து போகின்றன. நாட்டின் பல மாநிலங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் இதுபோன்ற சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். கேரளாவிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநரால் தேவையில்லாமல் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன என்றுள்ளார்.

தீர்மானம் நிறைவேற்றம்:

இதனிடையே, சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று ஆளுநருக்கு எதிராக கடந்த வாரம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோன்ற தீர்மானத்தை அனைத்து மாநிலங்களிலும் நிறைவேற்ற வேண்டும் என்று பாஜக ஆட்சியில் அல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

கெஜ்ரிவால் உறுதி:

இதற்கு பதில் தெரிவித்து, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால், இதேபோன்ற தீர்மானம் டெல்லி சட்டப்பேரவையிலும் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிந்திருந்த நிலையில், தற்போது கேரள முதல்வரும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்