ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் செய்வதாக பஞ்சாப் ஆளுநருக்கு எதிராக அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி கூறுகையில், உச்சநீதிமன்றத்தில் வழக்கு வருவதற்கு முன்பே ஆளுநர்கள் செயலாற்றி இருக்க வேண்டும். ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் அல்ல என்பதை உணர வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கோரி மாநில அரசு நீதிமன்றங்களை நாட வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினர்.
நீட் தேர்வால் இன்னோர் உயிர் போய்விடக்கூடாது… அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.!
பஞ்சாபை போல தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா அரசுகளுக்கும் ஆளுநருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளன. அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். விவகாரங்கள் நீதிமன்றத்திற்கு வருவதற்கு முன்னதாகவே கண்டிப்பாக ஆளுநர்கள் செயல்பட்டிருக்க வேண்டும் என்றும் மசோதா விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே பஞ்சாப் அரசு கூறுகையில், பஞ்சாப் பேரவை கூடுவதற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் முட்டுக்கட்டையாக உள்ளார். கடந்த முறை பஞ்சாப் சட்டப்பேரவை கூடியபோது நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களுக்கும் ஒப்புதல் தரவில்லை. ஆளுநர் ஒப்புதல் தராமல் நிறுத்தி வைத்துள்ள மசோதாக்களில் நிதி மசோதாவும் அடங்கும் என கூறியதை அடுத்து, பஞ்சாப் அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை நவம்பர் 10ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்து.
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…