அரசு விழாவில் சாதிய பாகுபாடு.? அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஆளுநர் தமிழிசை.!
நேற்று (நவம்பர் 15) ஆம் தேதி பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக போராடிய பிர்சா முண்டா அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த நாளானது பழங்குடியினர் தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டா சிலைக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீஷ் தன்கர், சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதேபோல, பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா பிறந்த இடமான ஜார்கண்ட் மாநிலத்தில் குந்தி மாவட்டத்தில் அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் அரசு விழா ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றன.
2024 கூட்டணி ஆட்சி தான்.. தெலுங்கானா முதல்வர் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய அமைச்சர்.!
புதுச்சேரியில் கம்பன் கலையரங்கத்தில், பிர்சா முண்டா பிறந்தநாள் விழாவில் பழங்குடியினரை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி பழங்குடியின மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை தொடங்கப்பட்டது.
இந்த விழாவில் தான் பழங்குடியின மக்கள் சிலர் இருக்கை இல்லாமல் தரையில் அமர வைக்கபட்டனர். பழங்குடி இன மக்கள் தரையில் அமர வைக்கப்பட்ட விவகாரம் அரங்கத்திலேயே சர்ச்சையை எழுப்பியது. சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டு பழங்குடியினர்கள் தரையில் அமரவைக்கப்பட்டதாக ஒரு சிலர் அரங்கத்தினுள் பழங்குடியின மக்களுக்கு இருக்கை அளிக்காதது குறித்து கூச்சலிட்டனர் இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இந்த விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சலசலப்பை அடுத்து பழங்குடியின மக்கள் ஏன் தரையில் அமர வைக்கப்பட்டார்கள் என்று அரசு அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு தமிழிசை சௌந்தர்ராஜன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
கம்பன் கலையரங்கத்தில் குறிப்பிட்டு அளவிலான இருக்கைகள் இருந்ததும், அதற்கு அதிகமாக மக்கள் வந்ததும் தான் இருக்கை இல்லாமல் போனதற்கு காரணம் என அதிகாரிகள் விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
இந்த விழா முடிந்து செய்தியாளரிடம் பேசிய பழங்குடியின மக்கள் புதுச்சேரி மாநிலத்தில் இருக்கும் நான்கு பழங்குடியின மக்களை அட்டவணை பழங்குடியின பட்டியலில் சேர்ப்பதற்கு மதிய உள்துறை அமைச்சரான அமித்ஷாவிடம் வலியுறுத்துமாறு துணைநிலை ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.