சிவசேனாவுக்கு அவகாசம் வழங்க ஆளுநர் மறுப்பு..!
மகாராஷ்டிரா ஆளுநரை சந்தித்த பின் சிவசேனா ஆதித்யா தாக்கரே செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் ” சிவசேனா ஆட்சியமைக்க விரும்புகிறோம் என ஆளுநரிடம் கூறினோம்.
ஆட்சியமைக்க இரண்டு நாள்கள் அவகாசம் வேண்டும் என கேட்டோம். அதற்கு ஆளுநர் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டார். ஆளுநர் ஆட்சியமைக்க வைத்த கோரிக்கையை மறுக்கவில்லை , ஆனால் அவகாசம் கொடுக்க தான் மறுத்து விட்டார் என கூறினார்.
மேலும் ஆட்சியமைக்க தொடர்ந்து சிவசேனா முயற்சி செய்யும் என கூறினார். இதை தொடர்ந்து ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் உடன் தொடந்து பேச்சு வார்த்தை நடத்திவருவதாக கூறினார்.