ராஜஸ்தானில் திடீர் திருப்பம்.. சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அதிரடி உத்தரவு..!

ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்தார்.
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். மேலும், கட்சிக் கொறடா உத்தரவை மீறிய சச்சின் பைலட் உள்பட அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் மீது தகுதி நீக்க நோட்டீஸை ராஜஸ்தான் சபாநாயகர் அனுப்பினார்.
இதை எதிர்த்து, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது எனவும் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என கூறியது.
இதனைதொடர்ந்து, ராஜஸ்தான் சட்டமன்றத்தை கூட்டி, தனது பெரும்பான்மையை காட்ட அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், கொரோனா காரணமாக சட்டமன்றத்தை கூட்ட ஆளுநர் மறுப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். அப்போது, சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பினர். இதற்கிடையில் ஆளுநர் உடன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் சந்தித்து பேசினார்.
கடந்த 2 வாரங்களாக அதிருப்தி எம்எல்ஏக்களால், ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்றாவது முறையாக முதல்வர் அசோக் கெலாட் ஆளுநரை சந்தித்துள்ளார்.
இந்த நிலையில், அதிரடி திருப்பமாக ராஜஸ்தான் சட்டப்பேரவையை கூட்ட முதல்வருக்கு ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா உத்தரவு பிறப்பித்தார். மேலும், சட்டப்பேரவை கூட்டத்தை நடத்த கூடாது என்பது தனது நோக்கம் அல்ல எனவும் ஆளுநர் விளக்கம் கொடுத்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025