மாகாராஷ்டிராவில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர்
மாகாராஷ்டிராவில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் 288 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளது.இங்கு பாஜக சிவசேனாவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.அதேபோல் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.காலை முதலே மக்கள் அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில் மாகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார் புரோஹித் .