பிரதமருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று சந்திப்பு..!

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று மாலை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று மாலை 4 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமர் இல்லம் சென்று இருவரும் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக ஆளுநர் இன்று பிரதமரை சந்திக்கிறார்.
இந்நிலையில் மாநிலத்தின் அரசியல் சூழல் மற்றும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமருடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நீட் தேர்வு விலக்கு தொடர்பான கோரிக்கை, மேகதாது அணை மற்றும் 7 பேர் விடுதலை குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.