#Justnow: பிரதமர் மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று காலை விமானம் மூலம் 3 நாள் பயணமாக சென்னையில் இருந்து டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லியில் ஆளுநர் பன்வாரிலால் பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்டது .
இந்த நிலையில், தற்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் வைத்து பன்வாரிலால் சந்தித்துள்ளார். பிரதமர் மோடியிடம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கொரோனா சூழலை குறித்தும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களின் விடுதலை உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.