மகாராஷ்டிரா ஆளுநர், தனது சொந்த மகள் போல தனது குறைகளை கேட்டறிந்தது எனது அதிர்ஷ்டம் என பாலிவுட் நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.
மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் கூறியது சர்ச்சையான நிலையில், சிவசேனா கட்சிக்கும், கங்கனா ரனாவதுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசேனா கட்சி ஆளும் மஹாராஷ்ரா மாநிலம், கங்கனா ரனாவத்க்கு தொடர்ந்து நெருக்கடிகளை கொடுத்து வருகிறது.
அந்தவகையில், மாநகராட்சியின் அனுமதியின்றி கட்டப்பட்டது என கூறி பாந்திராவில் உள்ள கங்கனா ரனாவத்தின் பங்களாவுடன் உள்ள அலுவலகம், இடிக்கப்பட்டது. அதற்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி அதிருப்தி தெரிவித்தார். இதன்காரணமாக கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரியை நேற்று மாலை சந்தித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், தனக்கு நடந்த அநியாத்தை பற்றி ஆளுநரிடம் விளக்கமாக கூறியதாக தெரிவித்த அவர், விரைவில் நீதி கிடைக்கும் என நம்புவதாக கூறினார். மேலும், ஆளுநர் தனது சொந்த மகள் போல தனது குறைகளை கேட்டறிந்தது, எனது அதிர்ஷ்டம் என தெரிவித்துள்ளார்.
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.3,000…
சென்னை : தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு…
சென்னை : இன்று சர்வதேச அளவில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக்…
ஜெருசலேம் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் பதற்றம் தணிந்து வராத வண்ணம் ஒரு பக்கம் இருந்து வருகிறது.…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது தொடங்கியுள்ளது. இன்று (நவம்பர் 25) தொடங்கிய இந்த கூட்டத்தொடர் வரும் டிசம்பர்…