பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி!
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பெற்றதையடுத்து, பல தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில், இவர் வரும் 30 தேதி பதவியேற்க உள்ளார்.
இதனையடுத்து புதுசேரி துணை நிலை ஆளுநரான கிரண்பேடி, இந்தியாவில் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பேட்டியளித்துள்ளார்.
மேலும், இந்தியா பல துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொரு தனி மனிதனும் இந்திய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.