கடந்த சில தினங்களுக்கு முன் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், புதுடெல்லி செல்வதற்காக திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, இந்திய மாணவர் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ) சேர்ந்தவர்கள் சிலர், அவரது காரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் குறித்து ஆளுநர் அவர்கள், கேரளா முதல்வர் பினராயி விஜயன் மீது குற்றசாட்டுகளை முன்வைத்திருந்தார். அவர் கூறுகையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனக்கு உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இந்த சம்பவம் தற்செயலான சம்பவம் அல்ல என்றும், மாறாக வேண்டுமென்றே தன்னை குறிவைத்து நடத்தப்பட்ட செயல் என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
மிக்ஜாம் புயல் பாதிப்பு.! 4 மாவட்ட மின் கட்டணம் எவ்வளவு.? வெளியான முக்கிய தகவல்…
ஆளுநரின் குற்றசாட்டையடுத்து கோட்டையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், ஆளுநர் ஒரு சந்தர்ப்பவாதி. ஆளுநர் ஆளுநராக மட்டும் செயல்பட வேண்டும். எதை வேண்டுமானாலும் செய்யலாம், யாருக்கும் சவால் விடலாம் அல்லது தனது விருப்பப்படி செயல்படலாம் என ஆளுநர் நினைக்க கூடாது.
அரசியல் சட்டப்படி ஆளுநருக்கு என்ன வேலையோ அதை மட்டும் ஆளுநர் செய்ய வேண்டும். வகிக்கும் பதவி இழுக்கு ஏற்படுத்தும் விதம் நடந்து கொள்ள கூடாது. தனிப்பட்ட மனிதனாக தான் ஆளுநரை மதிப்பதாகவும், அதன் உணர்ந்து ஆளுநர் செயல்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…