இணைய மோசடி.. சட்டவிரோத நடவடிக்கைகள்… 70 லட்சம் மொபைல் நம்பர்கள் முடக்கம்.!
டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்களை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது என்று நிதிச் சேவைகள் செயலர் விவேக் ஜோஷி தெரிவித்துள்ளார். இன்றைய நவீனகால உலகத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக நாட்டில் இணைய நிதி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அனைத்தும் டிஜிட்டல் மையமாக இருப்பதால், பெரும்பாலானோர், நிதி பரிவர்த்தனைகளை, ஆன்லைன் மூலமே செய்ய விரும்புகிறார்கள். இதனால், அவர்களது நேரம் மிச்சமாகிறது. இதன் காரணமாகவே டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இப்போது, சில அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வங்கி செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது.
சுரங்க மீட்பு பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு தலா ரூ.50,000 – உத்தரகண்ட் முதலமைச்சர் அறிவிப்பு
யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் என்றாலும் சரி, அல்லது வருமான வரி செலுத்த வேண்டும் என்றாலும், மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் என ஏதேனும் செலுத்த வேண்டும் என்றால், இணைய சேவைகள் நம் வாழ்க்கையை எளிதாக்கியுள்ளன. மின் கட்டணம், தொலைபேசி கட்டணம் என பல்வேறு கட்டணங்கள் செலுத்துவது, டிக்கெட்டுகள் புக் செய்வது, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டும் வருமான வரி செலுத்த வேண்டும் என பலவற்றை ஆன்லைனில் செய்யவே பெரும்பாலானோர் விரும்புகின்றனர்.
இருப்பினும், இணைய சேவையில் சில பிரச்சனைகளும் உள்ளன. சைபர் மோசடி செய்பவர்கள் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் நிதி மோசடி ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சைபர் மோசடிகளை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
அந்தவகையில், டிஜிட்டல் மோசடிகளைத் தடுக்கவும், சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக 70 லட்சம் மொபைல் எண்கள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. நிதி இணைய பாதுகாப்பு மற்றும் அதிகரித்து வரும் டிஜிட்டல் பேமெண்ட் மோசடி தொடர்பான பிரச்சனைகள் குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
பிரதமர் மோடியின் ‘விக்சித் பாரத்’ யாத்திரை… அனைத்து அமைச்சர்களுக்கும் கண்டிப்பான உத்தரவு.!
இதில், நிதி மோசடிகள், பொருளாதார குற்றங்கள், சைபர் குற்றங்கள் தடுக்க நவீன தொழில்நுட்பத்தை கையாளும் முறையை அதிவேகப்படுத்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த கூட்டத்துக்கு பிறகு நிதிச் சேவைகள் துறைச் செயலர் விவேக் ஜோஷி கூறியதாவது, சைபர் மோசடிகளை தடுப்பது தொடர்பான அமைப்புகளையும், நடைமுறைகளையும் வலுப்படுத்த வங்கிகள் வங்கிகளை கேட்டுக்கொண்டார். வணிகர்களின் கேஒய்சி தரப்படுத்தல் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மோசடி மூலம் ஏமாறும் வாடிக்கையாளர்களை, ஏமாறுவதில் இருந்து பாதுகாக்க சமூகத்தில் இணைய மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆதார் மூலம் செயல்படுத்தப்படும் கட்டண முறை (Aadhaar-enabled Payment System – AePS) மோசடி குறித்து கூறிய அவர், இந்த சிக்கலைக் கவனித்து தரவு பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், தேசிய சைபர் கிரைம் அறிக்கையிடல் போர்ட்டலில் (என்சிஆர்பி) பதிவாகியுள்ள டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகளின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் இதுபோன்ற கூட்டங்கள் மேலும் நடைபெறும் என்றும், அடுத்த கூட்டம் ஜனவரி மாதம் நடைபெறும் எனவும் நிதிச் சேவைகள் செயலர் தெரிவித்தார்.