அரசு இதனை செய்து தர வேண்டும்- சிதம்பரம்

தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும் என்று சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் ஒரு பகுதியாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அவரது பதிவில், நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும்.வேலையில்லாமல், பணமில்லாமல், உணவில்லாமல் 40 நாட்களுக்குப் பிறகும் முடங்கிக் கிடப்பதற்கு யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.
தங்கள் சொந்த ஊரில் தங்கள் குடும்பத்துடன் தங்கள் மொழி பேசும் மக்களிடையே இருக்க வேண்டும் என்ற உணர்வை ஊரடங்கு என்ற தாள் போட்டு எத்தனை நாட்களுக்கு அடைக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரு கோரிக்கை எழுந்துள்ளது. தங்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிச் செல்ல விரும்பும் குடியேறிய மக்களுக்கு (migrant persons) அந்த வாய்ப்பினை அரசு தர வேண்டும்
— P. Chidambaram (@PChidambaram_IN) April 24, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025