ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்கலாம் – மத்திய அரசு.!

rsss - centrel govt

டெல்லி : கடந்த 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை நீக்கி அரசு ஊழியர்கள் இனி ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயல்பாடுகளில் பங்கேற்கலாம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசு ஊழியர்கள் RSS-ல் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த தடையை மோடி அரசு விலக்கியுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் மத்திய ஊழியர்கள் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

பொதுவாகவே அரசு ஊழியர்களாக இருப்பவர்கள் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி. இந்த விதியின் கீழ் RSS எனும் இந்துத்துவா இயக்கத்திலும் மத்திய அரசு ஊழியர்கள் உறுப்பினர்களாக இருக்க கூடாது என்பது அரசு விதி.

இந்தநிலையில், கடந்த 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இப்போது மத்திய ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம் என உத்ராவிடப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால், மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க 58 ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீக்கப்பட்டு, மத்திய அரசு நேற்று வெளியிட்ட முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.

நேற்றைய தினம், சாவர்கரின் மதுரை எம்பி சு.வெங்கடேசன், பிறந்தநாளில் புதிய பாராளுமன்றத்தை திறந்து, தற்போது அரசு ஊழியர்களை RSS க்கு அனுப்பிவைக்கும் வேலையை துவக்கியிருக்கிறது மோடி அரசு என மத்திய அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்