teachersuspended [Image source : file image ]
கர்நாடக முதல்வர் சித்தராமையா விமர்சித்த அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் கொள்கைகளை விமர்சித்து முகநூல் பதிவு செய்ததற்காக அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சித்ரதுர்காவின் ஹோசதுர்காவில் உள்ள கானுபென்னஹள்ளி அரசுப் பள்ளியில் சாந்தமூர்த்தி என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
சாந்தமூர்த்தி தனது முகநூல் பதிவில், “இலவசம் கொடுக்காமல் வேறு என்ன செய்ய முடியும்” என்று மாநில அரசு பற்றியும் அதன் இலவசக் கொள்கைகள் குறித்தும் கூறியுள்ளார். மேலும், முன்னாள் முதல்வர்கள் அவர்களது பதவிக் காலத்தில் பெற்ற கடன் பற்றியும் சித்தராமையாவின் ஆட்சியில் மிக அதிகமாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “எஸ்.எம்.கிருஷ்ணா ரூ.3,590 கோடியும், தரம் சிங் ரூ.15,635 கோடியும், எச்டி குமாரசாமி ரூ.3,545 கோடியும், பிஎஸ் எடியூரப்பா ரூ.25,653 கோடியும், டி.வி.சதானந்த கவுடா ரூ.9,464 கோடியும், ஜெகதீஷ் ஷெட்டர் ரூ.13,464 கோடியும், சித்தராமையா ரூ 2,42,000 கோடியும் கடன் பெற்றுள்ளனர்.” என்று சாந்தமூர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, களக் கல்வி அலுவலர் எல்.ஜெயப்பா, ஆசிரியர் சாந்தமூர்த்தியை பணி இடைநீக்கம் செய்து சனிக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். மேலும், சித்தராமையா மாநில முதல்வராக பதவியேற்ற அதே நாளில் ஆசிரியர் சாந்தமூர்த்தி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…