அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயார் – பிரதமர் மோடி
நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன என்று பிரதமர் மோடி தகவல்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி இன்று தொடங்கி பிப். 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடக்க நாளான இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளின் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனிடையே, தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கூட்டத் தொடருக்கு வரவேற்கிறேன் என்று எம்பிக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். பட்ஜெட் கூட்டத்தொடர் இந்தியாவின் வளர்ச்சிக்கானதாக இருக்கும். அனைத்து உறுப்பினர்களும் திறந்த மனதுடன் தங்களது கருத்தை முன்வைக்கலாம் என்றார்.
நிதிநிலை கூட்டத்தொடரை ஆக்கப்பூர்வமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அனைத்து உறுப்பினர்களும் பிரதான ஆரோக்கியமான விவாதங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற நிதிநிலை கூட்டத்தொடரில் நிறைய முக்கியமான விஷயங்கள் விவாதிக்கப்படவுள்ளன. நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க மத்திய அரசு திறந்த மனதுடன் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.