மத்திய பிரதேசத்தில், தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், மத்திய பிரதேசத்தில் கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் பள்ளிகள் உட்பட, பல்வேறு இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மாநிலம் முழுவதும் 225-க்கும் மேற்பட்ட மையங்கள் திறக்கப்பட்டது.
தற்போது மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் குறைந்து, கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இந்த சிகிச்சை மையங்களில் அதிக நோயாளிகள் இல்லை. எனவே தலைநகர் போபாலை தவிர, பிற பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்களை மூடுமாறு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த சிகிச்சை மையங்கள் மூடப்பட்டு வருகின்றன.
ஆனால் முன்னாள் முதல் மந்திரியும் மாநில காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் , இந்த நடவடிக்கையை குறை கூறியுள்ளார்கள். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சட்டசபை கூட்டத் தொடரை ரத்து செய்திருக்கும் நிலையில், இந்த சிகிச்சை மையங்களை மூடுவது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால் முதல்-மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தனது முடிவை நியாயப்படுத்தி உள்ள நிலையில், தேவைப்பட்டால் அரசிடம் அனுமதி பெற்று மீண்டும் அந்த மையங்களை திறக்கலாம் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…