N-95 முக கவசம் உபயோகிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அரசாங்கம்!

N- 95 சுவாச வால்வுகள் பொருத்தப்பட்டுள்ள முகக்கவசத்தை அணிவது நல்லதல்ல என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், மக்களனைவரும் இதிலிருந்து பாதுகாக்கப்பட கைகளை அடிக்கடி கழுவிசுவதும், முக கவசங்களை உபயோகிப்பதும் நல்லது என அரசாங்கத்தால் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், முகக்கவசங்களின் விற்பனைகளும் அமோகமாக இருந்தது.
இருப்பினும் மக்கள் ஹைஜீனிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட முகக்கவசங்களை உபயோகித்து வருகின்றனர், அதின் ஒன்று தான் N-95 எனும் சுவாச வால்வு பொருத்தப்பட்டுள்ள முகக்கவசம். இதை பல்லாயிரக்கணக்கானோர் வாங்கி உபயோகித்து வருகின்றனர்.
இந்நிலையில், மத்திய அரசாங்கம் இந்த மாஸ்க்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதாவது, இவ்ந்த மாஸ்க் உபயோகிப்பதற்கு ஏற்றதல்ல எனவும், மக்கள் வேறேதேனும் துணி மாஸ்குகளை உபயோகியுங்கள் எனவும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு எச்சரிகை விடுத்துள்ளது.