ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு!

ஆப்பிரிக்காவிலிருந்து டெல்லி வந்தடைந்த 16 தமிழர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவிய தமிழக அரசு.
கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்து வரும் இந்தியர்கள் பலர் சொந்த ஊருக்கு வர முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்பிரிக்காவிலிருந்து கடந்த 21ஆம் தேதி 16 தமிழர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். ஆனால் அவர்களது சொந்த ஊரான சென்னைக்குச் செல்வதற்கு வசதி இல்லாமல் தவித்து வந்துள்ளனர்.
சென்னைக்கு செல்வதற்காக ஒரு ட்ராவல் ஏஜென்சியை அவர்கள் தொடர்பு கொண்டு பணத்தை செலுத்திவிட்டு அந்த நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தமிழக அரசு அதிகாரிகள், அவர்களுக்கு உதவி செய்ய முன் வந்தனர். தமிழக அரசு இல்ல முதன்மை உறைவிட ஆணையர் ஹிதேஷ்குமார் மக்வானா அவர்கள் தலைமையில் அவர்களுக்கான ரயில் கட்டணம் மற்றும் உணவு வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளனர் அதிகரிகள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025