தனியார் மருத்துவமனைக்கு யூனிட் 20,000 ரூபாய் என பிளாஸ்மா கொடுக்கும் பஞ்சாப் அரசு!
பஞ்சாப் அரசு அம்மாநிலத்திலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு யூனிட் 20,000 என 50,000 ரூபாய்க்கு பிளாஸ்மா வழங்க உள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் தற்பொழுது பிளாஸ்மா வங்கிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு கொண்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாகிய பஞ்சாபிலும் அரசு பிளாஸ்மா வாங்கி உள்ளது.
இந்நிலையில், பஞ்சாபில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக பிளாஸ்மா வழங்கப்படும். ஆனால் தனியார் மருத்துவமனைகலீல் சிகிச்சை பெறுவோர் அதற்காக பெருந்தொகையை செலவழிக்கின்றனர். இதனை தொடர்ந்து தனியார் மருத்துவமனைகள் அரசிடமிருந்து பிளாஸ்மாவை ஒரு யூனிட் 20,000 ரூபாய் என மொத்தம் 50,000 ரூபாய்க்கு வாங்கவுள்ளது. பஞ்சாப் அரசும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்க முன்வந்துள்ளது.