நவம்பர் 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு – கேரள அரசு அறிவிப்பு!
கேரளாவில் நவம்பர் மாதம் முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளும் திறக்க அனுமதி அளித்தது அம்மாநில அரசு.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் நாட்களில் ஊரடங்கை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுபோன்று நவம்பர் 1-ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 10 முதல் 12ஆம் வகுப்புகளுக்கும், பள்ளிகளை திறக்க முடிவு எடுக்கப்பட்டதாகவும், எஞ்சிய வகுப்புகளுக்கு 15ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றி, அக்டோபர் 4 முதல் தொழில்நுட்ப கல்லூரிகள் உட்பட அனைத்து கல்லூரிகளையும் திறக்க முதல்வர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில். ஏற்கனவே 9 முதல் 12 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.