இந்தியாவிற்கு 7.5 லட்சம் சுவாசக் கருவிகள் அனுப்பிவைத்த கஜகஸ்தான் அரசு!
கஜகஸ்தான் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு 7.5 லட்சம் சுவாச கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. தினமும் லட்சக் கணக்கானோர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுவதால் பல்வேறு மாநில அரசுகளும் மருத்துவமனைகளில் போதிய அத்தியாவசிய தேவைகளின்றி திணறி வருகிறது. மேலும் இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறை தான் தலைவிரித்து ஆடுகிறது. இருப்பினும் பல நாடுகள் இந்தியாவுக்கு தேவையான வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், மருந்துகள் மற்றும் மருத்துவமனை உபகரணங்களை வழங்கி வருகிறது.
குறிப்பாக ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவிற்கு தற்போது உதவிக்கரம்நீட்டி வருகிறது. அந்த வகையில் கஜகஸ்தான் நாட்டில் இருந்தும் ஏற்கனவே இந்தியாவுக்கு 56 சுவாசகருவிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுதும் இந்தியாவின் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்து உபகரணங்கள் விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை விமானம் மூலமாக அனுப்பட்டுள்ள நிவாரணத்தில், 7 லட்சத்து 50 ஆயிரம் சுவாச கருவிகள் மற்றும் 105 வென்டிலேட்டர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
????????????????
Continuing cooperation with our Strategic Partner. Aircraft arrives carrying consignment of 105 ventilators, 750000 masks/respirators and other medical equipment from Kazakhstan. Grateful to Kazakhstan for the support. pic.twitter.com/L63nAnsQ06— Arindam Bagchi (@MEAIndia) May 15, 2021