மக்களுக்கு வலி, இழப்பு என வரும் பொழுது இந்திய அரசு தூங்குகிறது – ராகுல் காந்தி!
மக்களுக்கு வலி, இழப்பு என வரும் பொழுது இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு குறித்த தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இது தொடர்பாக பேசிய ராகுல் காந்தி, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சரியான புள்ளி விபரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் எனவும், அவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டாம் அலையின் பொழுது கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு முறையாக இறப்பு சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய அரசு மக்களுக்கு வலி மற்றும் இழப்பு என வரும்பொழுது தூங்குகிறது, வாருங்கள் எழுப்புவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
When it comes to people’s pain & loss, GOI is sleeping.
Let’s wake them up! #SpeakUpforCovidNyay
— Rahul Gandhi (@RahulGandhi) December 4, 2021