#Breaking:ஊரடங்கை கடுமையாக்க மத்திய அரசு அறிவுரை.!
ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க நேற்று மாலை 5 மணிக்கு அனைவரும் வீட்டின் வாசலில் நின்று கைதட்ட வேண்டும் என மோடி கூறியிருந்தார்.ஆனால் மும்பை ,டெல்லி போன்ற பல இடங்களில் பொதுமக்கள் தெருவில் வந்து கூட்டமாக கொண்டாடினர்.
இதையெடுத்து கொரோனா முன்னெச்சரிக்கைக்கான விதிமுறைகள் மக்கள் தீவிரமாக பின்பற்றவில்லை என பிரதமர் மோடி இன்று வருத்தம் தெரிவித்த நிலையில் ஊரடங்கை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.