அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு!
ஆட்சேர்ப்புத் தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக மாநில பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு.
தேர்வாணையம் கலைப்பு:
இமாச்சல பிரதேச அரசு பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது அம்மாநில அரசு. அரசு பணியாளர் போட்டித்தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரத்தை அடுத்து, மாநில பணியாளர் தேர்வாணையத்தை கூண்டோடு கலைத்து இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானத்து குறித்து துறை வாரியாகவும், காவல்துறை மூலமாகவும் விசாரணை நடத்தப்பட்டது.
வினாத்தாள் கசிவு:
புகாருக்குள்ளான தேர்வாணைய ஊழியர்கள் மீது விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மணியில முதலமைச்சர் சுக்விந்தர் அறிவித்துள்ளார். பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படாமல், கசிந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வாணைய ஊழியர்கள் அனைவரும் வேறு துறைகளுக்கு மாற்றப்படுவார்கள் எனவும் முதலமைச்சர் கூறியுள்ளார்.
தேர்வு ரத்து:
இதனிடையே, இமாச்சலப் பிரதேச பணியாளர் தேர்வாணைய ஊழியர்கள் கடந்த காலங்களிலும் ஆட்சேர்ப்பு முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்ததாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் 23ம் தேதி வினாத்தாள் கசிவு கண்டுபிடிக்கப்பட்ட பின், டிச25ம் தேதி திட்டமிடப்பட்ட JOA (IT) தேர்வு ரத்து செய்யப்பட்டது. விஜிலென்ஸ் துறையானது HPSSC-இன் மூத்த உதவியாளர் உமா ஆசாத்தை தீர்க்கப்பட்ட வினாத்தாள் மற்றும் ரூ 2.5 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.
அறிக்கை சமர்ப்பிப்பு:
தடயவியல் நிபுணர்கள், வினாத்தாள்கள், நிதி பரிவர்த்தனைகள், குரல் பதிவுகள் மற்றும் மொபைல் போன்கள், மடிக்கணினிகள், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் மின்னணு ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து கண்டறிந்தனர். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தின் ஒரே தடயவியல் ஆய்வகமான தர்மஷாலாவின் பிராந்திய தடயவியல் ஆய்வகம், 75% சாதனங்களைத் திரையிட்டு, வழக்கை விசாரிக்கும் புலனாய்வு அமைப்புகளிடம் அறிக்கையை சமர்ப்பித்த நிலையில், தேர்வுத் தாள் கசிவு தொடர்பாக மாநில பணியாளர் தேர்வாணையத்தை கலைத்தது இமாச்சல அரசு.