தடுப்பூசி ஊழியர்களுக்கு மட்டுமே குடும்ப உறுப்பினர்களுக்கு கிடையாது – மத்திய அரசு

Default Image

தனியார் மற்றும் அரசு அலுவலங்களில் நடத்தும் தடுப்பூசி இயக்கம் ஊழியர்களுக்கு மட்டுமே என்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த வசதியை பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பல நிறுவனங்களும் தொழில்துறை அமைப்புகளும் இந்தபிரச்சனையை சரி செய்வதற்கான வழிமுறைகள் கிடைக்குமா என்று எதிர்பார்க்கிறது.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திலிருந்து விரிவான வழிகாட்டுதல்களுடன் மாநில அரசுகளுக்கு வழங்கப்படுகிறது.

45 ஆண்டுகள் பணி ஆணை உள்ள ஊழியர்களும் அரசு குறிப்பிட்ட தடுப்பூசி கட்டுப்பாடு கட்டுப்பாடுகளுக்குள் வருவார்கள் என்று கடிதம் குறிப்பிடுகிறது.இதை தொழில்துறை அமைப்புகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தகைய விதிமுறைகள் இருப்பதைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளனர்.

இந்த கடிதம் குறிப்பிடுகிற புதிய சீர்த்திருத்த வழிகாட்டுதல்கள் பழைய வழிகாட்டுதல் மாதிரி போல் இருப்பதாகவும் ஆனால் அமைச்சகத்தின் இணையதளத்தில் தெளிவாக கிடைக்கப்பெறவில்லை என்று பல நிறுவனங்கள் அரசிடம் விளக்கம் கோரியுள்ளன.

இது முன்னேரே மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தால் மக்கள் பிற மையங்களில்  தடுப்பூசி போட தங்களுக்கான வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பார்கள்.ஆனால் இந்த புதிய அறிவிப்பு  18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட தற்பொழுது  சிக்கலாகியுள்ளது ,”என்று ஒரு நிறுவனத்தின் நிர்வாகி கூறினார்.

புதன்கிழமை வந்த இந்த அறிவிப்பு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுடான  உறவுகளை பாதிக்காது என்றும்,ஆனால் தடுப்பூசி போடுவதற்கான முன்னெடுத்தலை பாதிக்கும் என ஒரு தொழில்துறை நிறுவனம்  TOI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தனர்.

இதற்கான செயல்முறைகள் இல்லாத சிறிய நகரங்கள் மற்றும் பெரிய நகரங்களில் இதன் விளைவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக அரசாங்கம் ஊழியர்களுக்கும், நிறுவனங்களுடன் தொடர்புடைவர்களுக்கும் கூட தடுப்பூசி போட வேண்டும் என கூறினர்.ஆனால் இப்பொழுது கூறுவது எங்களுக்கு குழப்பமாக உள்ளது என ஒரு முன்னணி தொழில் அமைப்பின் செயல்பாட்டாளர் கூறினார்.

இது தொடர்பாக சுகாதாரத்துறை எங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்றாலும், தொழில்துறை நிர்வாகிகள் தடுப்பூசி பற்றாகுறை இருக்கும் என குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறு குடும்ப உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவதை நிறுத்தினால்,நிறுவனங்களில் பணிபுரிபவர்களிடத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கநிலை ஏற்படும் என்று நிறுவனங்கள் அஞ்சுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
Nithyananda
narendra modi donald trump
siraj
rain tn
Waqf Amendment Bill 2025
RCB vs GT