மத்திய பிரதேசத்தில் அரசு பணி இவர்களுக்கு மட்டுமே – சிவ்ராஜ் சிங் சவுகான்
மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் மாநில இளைஞர்களுக்கு மட்டுமே முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று மாநில அரசு வேலைகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதற்காக அவரது அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கப் போகிறது எனறார்.
மத்திய பிரதேசத்தில் அரசு வேலைகள் இப்போது மாநிலத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று மாநில அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக, நாங்கள் தேவையான சட்ட விதிகளை செய்து வருகிறோம். மத்திய பிரதேசத்தின் வளங்கள் மாநில இளைஞர்களுக்கானது என்று அவர் கூறினார்.