குடிமக்களுக்கு இன்பச்செய்தி.! இனி ஆன்லைனில் மது விற்பனை அரசு அதிரடி .!
- மத்திய பிரதேசத்தில் மது விற்பனை மூலம் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை அரசு கொண்டு வந்து உள்ளது.
- வெளிநாட்டு மதுபானங்களை மட்டுமே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் மது விற்பனை மூலம் வருமானத்தை அதிகரிக்க அம்மாநில அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்து உள்ளது. ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யப்படும் எனஅறிவித்து உள்ளது.மத்திய பிரதேசத்தில் 2544 உள்நாட்டு மதுபான கடைகளும், 1061 வெளிநாட்டு மதுபான கடைகளும் உள்ளன.
இதையெடுத்து வெளிநாட்டு மதுபானங்களை மட்டுமே ஆன்லைன் மூலமாக விற்பனை செய்யப்படும் எனவும் வியாபாரத்தின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வர ஒவ்வொரு பாட்டிலிலும் பார்கோட் ஒட்டப்படும் என கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மது விற்பனையை விட இந்த ஆண்டு மது விற்பனை 25 சதவீதம் அதிகம் விற்பனையாகும் என மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.