கல்லூரிகளை மூட,இணையத்தை முடக்க அரசுக்கு உரிமையில்லை – ராகுல் காந்தி
- குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
- அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது என்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில் இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.இதன் விளைவாக டெல்லி ,பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு வருகிறது.
This government has no right to shut down colleges, telephones & the Internet, to halt metro trains and to impose #Section144 to suppress India’s voice & prevent peaceful protests.
To do so is an insult to India’s soul.
— Rahul Gandhi (@RahulGandhi) December 19, 2019
இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,144 தடை உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது என்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் .கல்லூரிகளை மூடுவதற்கும், தகவல் தொடர்பு மற்றும் இணையத்தை முடக்குவதற்கும், மெட்ரோ ரயிலை நிறுத்துவதற்கும் அரசுக்கு உரிமையில்லை என்று பதிவிட்டுள்ளார்.