புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தமிழில் உரையாற்றி வருகிறார். இக்கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றிய பின்னர் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை துணை சபாநாயகராக பதவி ஏற்றுக் கொள்ள உள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய தமிழிசை அவர்கள், புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்ட நிலையில், தொற்று பரவலை அரசு கட்டுப்படுத்தியுள்ளது. எனவே கொரோனாவை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
திருக்குறளுடன் தனது உரையை தொடங்கிய தமிழிசை அடிக்கடி திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய நிலையில், 250 காய்கறி விதைப்பைகள் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. 11 டிராக்டர்கள், 9 பவர் டிரில்லர்கள், நெல் நடவு இயந்திரங்கள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், புதுச்சேரியில் 2020-21-ல் ரூ.9 ஆயிரம் கோடி வருவாய் எதிர்பார்த்த நிலையில் ரூ.8,419 கோடி வந்துள்ளது. மாடித்தோட்டத்தை ஊக்குவிக்க ரூ.3,000 மதிப்புள்ள விதைகள் அடங்கிய பைகள் 75% மானியத்தில் வழங்கப்படும். வருவாயை பெருக்கும் வகையில் புதுச்சேரி பட்ஜெட் இருக்கும் என்று நம்புகிறேன் என கூறியுள்ளார். புதுச்சேரியில் இன்று மாலை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…