கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, வாகனத்தை பராமரிப்பது குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியதாவது:
தலைநகர் பெங்களூருவில் இருந்து மும்பை, கோவா, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் கேஎஸ்ஆர்டிசி விரைவு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடிக்கும் போது, இருக்கையில் இருந்து கீழே விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மேலும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்கவும், பேருந்துகளில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, கோவா, திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் இந்த திட்டம் விரைவில் அமல்ப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் இயங்கும் 765 வழிகளிலும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…