அரசு பேருந்தில் சீட் பெல்ட் கட்டாயம் கர்நாடக அரசு அதிரடி முடிவு…!!

Default Image

கர்நாடக அரசின் சார்பில் பெங்களூருவில் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, வாகனத்தை பராமரிப்பது குறித்தும், விபத்துகளை தடுப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது குறித்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமா சங்கர் கூறியதாவது:

தலைநகர் பெங்களூருவில் இருந்து மும்பை, கோவா, திருவனந்தபுரம், ஹைதராபாத் போன்ற தொலைதூர நகரங்களுக்கு செல்லும் கேஎஸ்ஆர்டிசி விரைவு பேருந்துகள் அவ்வப்போது விபத்துகளில் சிக்குகின்றன. குறிப்பாக நெடுஞ்சாலைகளில் திடீரென ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க ஓட்டுநர் திடீரென பிரேக் பிடிக்கும் போது, இருக்கையில் இருந்து கீழே விழுந்து இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மேலும் விபத்துகளில் சிக்கி உயிரிழப்போரின் எண்ணிக்கையை குறைக்கவும், பேருந்துகளில் சீட் பெல்ட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மும்பை, கோவா, திருவனந்தபுரம் செல்லும் பேருந்துகளில் இந்த திட்டம் விரைவில் அமல்ப்படுத்தப்படும். பின்னர் படிப்படியாக‌ கேஎஸ்ஆர்டிசி பேருந்துகள் இயங்கும் 765 வழிகளிலும், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்