ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்து மீது டெம்போ ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மஹ்வா-ஹிந்தவுன் சாலையின் அருகே திக்ரி திருப்பத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை 21 -ல் நடந்த இந்த விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
அரசு பேருந்து மஹ்வாவில் இருந்து ஹிந்தவுன் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ஹிண்டான் பக்கத்தில் இருந்து டெம்போ வந்து கொண்டிருந்தது. மஹ்வா-ஹிந்தவுன் சாலை அருகே திக்ரி திருப்பம் அருகே வேகமாக வந்த பேருந்து டெம்போ மீது மோதியது. மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்த அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்ததாகவும், 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மேலும், இந்த சம்பவத்தை அடுத்து பேருந்து ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், போலீஸார் பேருந்தை பறிமுதல் செய்து ஓட்டுநரை தேடி வருவதாகவும், ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் மஹ்வா வட்ட அதிகாரி பிரேம் பகதூர் கூறியுள்ளார்.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…
உத்தரப்பிரதேசம் : ஜான்சி மாவட்டத்தில் மகாராணி லட்சுமிபாய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்றிரவு நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில், பச்சிளம்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…