யூடியூப் உதவியால் கண்டுபிடிக்கப்பட்ட கோம்திரம் கம்பீர் சிங்..!

Default Image

 

யூடியூப் நிறுவனம் உலகம் முழுவதும் தனது வீடியோ சேவைகளை வழங்கி வருகிறது. யூடியூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அமெரிக்காவின் கலிஃபோர்னியா அருகே உள்ள சான் ஃபருனோ என்ற இடத்தில் அமைந்துள்ளது.

மணிபூர் மாநிலத்தில் இருக்கும் இம்பால் என்ற இடத்தை சேர்ந்தவர் கோம்திரம் கம்பீர் சிங்(65), இவர் கடந்த 1978-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து காணமால் போயிருக்கிறார். அதன்பின்பு அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.மேலும் கம்பீர் சிங் மும்பையில் இருக்கும் பல்வேறு ஆலைகளில் வேலை செய்தார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ம் தேதி மும்பை ரயில் நிலையத்தில் கம்பீர் சிங் பாடியதை வீடியோ எடுத்த ஃபேஷன் டிசைனர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கடந்த வெள்ளிக் கிழமை அன்று கம்பீர் சிங் பாடிய வீடியோவை பார்த்த அவரின் குடும்பத்தாரால் அவர் மிக எளிமையாக அடையாளம் காணப்பட்டார்.

அதன்பின்பு இம்பால் காவல் துறையை அணுகி அவரின் புகைப்படத்தை அளித்துள்ளனர், பின்பு அவர்களும் புகைப்படத்தை மும்பை பந்த்ரா பகுதி காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் பந்த்ரா போலீசார் புகைப்படத்துடன் ரயில் நிலையத்திற்கு சென்று கம்பீர் சிங்கை அடையாளம் கண்டுபிடித்து அழைத்து வந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்