கோரேகான் தீ விபத்து.! உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு பிரதமர் மோடி ரூ.2 லட்சம் நிதியுதவி.!

Goregaon Fire

மும்பையின் கோரேகானில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்த்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி நிதிஉதவி அறிவித்துள்ளார். கோரேகானில் எம்ஜி சாலையில் உள்ள ஒரு கட்டிடத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த முயற்சி எடுத்ததோடு, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் சிக்கியவர்களையும் மீட்டனர். இந்த விபத்தில் 46 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். காயமடைந்த 39 பேர் உடனடியாக பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைகாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் இரங்கல் தெரிவித்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னுடைய இரங்கலைத் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியான அவரது பதிவில், “மும்பையின் கோரேகானில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர் இழந்தது வேதனை அளிக்கிறது. உயிரிழந்த குடும்பங்களுக்கு அனுதாபங்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் செய்து வருகின்றனர். உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் உதவித் தொகையாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இரங்கல் தெரிவித்த மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, “நகராட்சி கமிஷனர் மற்றும் போலீசாரிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். நடந்தது துரதிஷ்டவசமானது. இறந்தவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பங்களுக்கு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கும். காயமடைந்தவர்களுக்கு அரசு சார்பில் சிகிச்சை அளிக்கப்படும்.” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்