கூகுள் பே’ பரிவர்த்தனையில் விதிமீற நடப்பதாக எழுந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது.
உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொதுநல வழக்கு ஒன்றினை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் டெல்லி உயர்நிதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீதானவிசாரணை ஆனது டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, ‘‘கூகுள் பே பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள உதவும் செயலி. அது விதிமீறல் எதையும் செய்யவில்லை’’ என்று கூறினார்.வழக்கு தொடர்ந்த மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாயல் பாஹல், பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள ரிசர்வ் வங்கியின் அங்கீகாரத்தை கூகுள் பெறவில்லை என குறிப்பிட்டார்.
இம்மனு மீதான விசாரணையில் நிதிமன்றத்தில் ஆர்பிஐ தெரிவித்த கருத்துக்களாவது:‘‘கூகுள் பே என்பது ஒரு செயலியை அளிக்கும் 3ம் தரப்பு சேவை நிறுவனமே’’ என்று ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது. பணப் பரிவர்த்தனைக்கென தனி சிஸ்டம் எதையும் அது உருவாக்கி செயல்படுத்தவில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.என்ற போதிலும் பணப் பரிவர்த்தனை சட்டம் 2007ன் படியே அது செயல்படுவதாக தெரிவித்துள்ள ஆர்பிஐ கூகுள் பேயில் எத்தகைய விதி மீறலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இம்மனு மீதான விரிவான விசாரணையை ஜூலை., 22ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தனர்.