சபரிமலை ஐயப்பன் கோவிலில் காணிக்கை செலுத்த கூகுள் பே வசதி..! 22 இடங்களில் QR CODE..!

Default Image

பரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து இடங்களிலும் பணப்பரிமாற்றம் செய்யும் முறைகள் டிஜிட்டல் மயமாகி வரும் காலகட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் கூகுள் பே மூலம் காணிக்கை செலுத்துவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பணம் செலுத்துவதற்காக 22 இடங்களில், ஐயப்பன் கோயிலை சுற்றி QR CODE வைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் அனைவரும் இந்த CODE-ஐ ஸ்கேன் செய்து விருப்பமான தொகையை காணிக்கையாக செலுத்தலாம். மேலும் இன்னும் கூடுதல் இடங்களில் க்யூ ஆர் கோடு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சபரிமலை கோவில் தலைமை அதிகாரி கிருஷ்ணகுமார் வாரியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் காணிக்கை பெறுவதற்கான வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கேரளா அரசரிடம் பக்தர்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த திருவாங்கூர் தேவசம் போர்டு வலியுறுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்