டெல்லி: ஜாமீனில் வெளியே வந்தவரை கூகுள் மேப் உதவியுடன் இருப்பிடத்தை தொடர கூடாது என உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சட்டப்பட்டு கைதாகி இருந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த ஃபிராங்க் விட்டஸுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அண்மையில் ஜாமீன் வழங்கியது. ஆனால். அந்த ஜாமீன் உத்தரவு மீது பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருந்தது.
குறிப்பாக, ஜாமீனில் வெளியே வந்தவரின் இருப்பிடத்தை அதிகாரிகள் எளிதில் தெரிந்து கொள்ள கூகுள் மேப் ஆன் செய்து வைத்து இருக்க வேண்டும். மேலும், ஜமீனில் வெளியே வந்தவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்றுவிட கூடாது என நைஜீரிய நாட்டு தூதரகத்திடம் இருந்து உத்தரவாதம் வாங்க வேண்டும் என்றும் டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த ஜாமீன் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தது.
இந்த நிபந்தனைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நைஜீரியா நபர் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நீதிபதி அபய் எஸ் ஓகா மற்றும் நீதிபதி உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. கூகுள் மேப் மூலம் ஜாமீனில் வெளியே வந்தவர்களின் இருப்பிடத்தை கண்டறியும் நிலையானது தனிநபர் சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறினர்.
மேலும், இந்த உத்தரவானது நீதிமன்றம் ஜாமீன் வழங்குவதன் நோக்கத்தை மீறும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டது. இதுபோல கூகுள் மேப் மூலம் யாருடைய இருப்பிடத்தையும் கண்டறிய கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இதனை தொடர்ந்து, இந்தியாவை விட்டு வெளியேற மாட்டேன் என நைஜீரியா தூதரகத்திடம் உத்தரவாதம் பெற இருந்ததையும் தளர்த்தி உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…
ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…