கூகுளுக்கு ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக 936 கோடி அபராதம்!

Default Image

கூகுள் நிறுவனத்திற்கு 936 கோடி அபராதம் விதித்துள்ளது CCI ( Competition Commission of India) அமைப்பு.

ப்ளே ஸ்டோர் கொள்கையில் அதன் மேலாதிக்க நிலையை தவறாகப் பயன்படுத்தியதற்காக, கூகுளுக்கு இந்திய ஆணையம் (சிசிஐ) செவ்வாய்க்கிழமை இரண்டாவது முறையாக ₹ 936.44 கோடி அபராதம் விதித்துள்ளது. நியாயமற்ற வணிக நடைமுறைகளில் ஈடுபடுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அந்நிறுவனம் கூகுளின் செயலிகளை புது ஸ்மார்ட்போன்களில் நிறுவி சந்தைப்படுத்துவதால், போட்டி நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக இதற்கு முன்னர் அக்டோபர் 20 அன்று,1337 கோடி அபராதம் விதித்தது.

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக கூகுளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மொத்த அபாரதத் தொகையின் மதிப்பு ₹ 2,274 கோடியாகும்.

.கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு போன்களுக்கான இயங்குதளங்களை நடத்தி வருகிறது.கூகுள் தனது நடத்தையை வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் மாற்றியமைக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்