தினக்கூலி தொழிலாளர்களுக்காக 5 கோடி நிதியளித்த கூகுள் நிறுவனம்.!

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அந்த ஊரடங்கு தற்போது மேலும், 19 நாள் நீட்டித்து மே 3-ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், தினக்கூலிகள் என பலரும் வேலையில்லாமல் அன்றாட வாழ்வை நகர்த்துவதற்கு தவித்து வருகின்றனர். இவர்களுக்கு பல தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கூகுள் நிறுவனம் சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர்களான கட்டட தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கில், கிவ்இந்தியா ( Give India ) என்கிற தன்னார்வ அமைப்பிற்கு 5 கோடி நிதியளிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்து கிவ்இந்தியா ( Give India ) அமைப்பு தங்கள் டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்தனர்.
Thank you @Googleorg – from us and from the daily wagers who your generosity will be helping 🙂#IndiaFightsCorona #emergencycash #GivingBack https://t.co/I1cSRWzvrj
— GiveIndia (@GiveIndia) April 14, 2020