#BiharElection2020: பாஜகவுக்கு குட் பாய்…சிராக் பாஸ்வான் பரபர

Default Image

இன்று பீகார் முதற்கட்ட சட்டசபைத் தேர்தல்  வாக்குபதிவு தொடங்கியது. பாதுக்காப்பு பணியில் 30,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாப் பரவலுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  இச்சூழலில் பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது.இன்று 71 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

பீகார் தேர்தலில் மொத்தவேட்பாளர்  114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

மொத்த வாக்களர்கள் 2.14 கோடி.தேர்தலில் போட்டியிடுபர்வகளில் 31% பேர் மீது கிரீமினல் வழக்கு  உள்ளது குறிப்பிடத்தக்கது.30,000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இனி பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 71 தொகுதிகள்  குறித்த விவரம் இதோ:

ஆர்ஜேடி-41 தொகுதிகளிலும்,ஜேடியூ-41 தொகுதிகளிலும்,பாஜக 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் 21 தொகுதிகளிலும், எல்ஜேபி-41 தொகுதிகளிலும் களம் காணுகின்றன.

இந்நிலையில் பீகார் முதற்கட்ட தேர்தலில் களத்தில் நிற்கும் பிரபலபங்களின் பட்டியல் இதோ:

பாஜக வேட்பாளராக காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற ஷ்ரேயாசி சிங் களத்தில் உள்ளார்.மேலும் முதலமைச்சர் நித்திஸ்குமாரின் அமைச்சரவையின் 6 அமைச்சர்கள் களத்தில் உள்ளனர்.முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மாஞ்சியும் முதல்கட்ட தேர்தலில் களம் காணுகின்றனர்.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.2ம் கட்ட வாக்குப்பதிவு நவ.,3ந்தேதி நடைபெறுகிறது.3ம்கட்ட வாக்குப்பதிவு நவ.,7ந்தேதி நடைபெறுகிறது.வாக்கு எண்ணிக்கை நவ.,10ந்தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்   வாக்களிப்பதிவு நடைபெறுவதற்கு முன்பே சிராக் பாஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு ஜேடியூ, ஆர்ஜேடியுடன் கை கோர்க்கும் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்