மத்திய இடைக்கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முதன் முதலாக புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். இதற்கான கூட்டத்தொடர் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் நேற்று தொடங்கியது . நேற்று குடியரசு தலைவர் உரையில் ஆளும் பாஜக அரசின் நலத்திட்டங்கள் குறிப்பிடப்பட்டன.
இதனை தொடர்ந்து இன்று மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்கிறார். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் தாக்கல் செய்யப்படும் இந்த இடைக்கால பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வேளாண் துறை, விவசாயம் தொடர்பாக பல்வேறு சிறப்பம்சங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.
பட்ஜெட்டை தாக்கல் செய்ய புறப்பட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!
மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது குறித்து, நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘ பொருளாதாரத்தை இயக்குவதில் நமது நிதித்துறை எப்படி செயல்பட்டது என்பது தொழில்துறையின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த எதிர்பார்ப்பு இன்று மிகத் தெளிவாக கூறப்படும்.
இடைக்கால பட்ஜெட் என்பதால், நமது நிதிப்பற்றாக்குறையை நம்மால் முழுமையாக கட்டுப்படுத்த முடியுமா என்று அனைவரும் உற்று நோக்குகின்றனர். நாம் வரி செலுத்துவதன் மூலமும், மக்கள் மற்றும் வணிகர்களிடம் உரிய வரி வசூலிப்பதன் மூலமும், இந்தாண்டு நியாயமான முறையில் நல்ல வரி வசூல் இருந்துள்ளது.
ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டங்கள் ஆகியவற்றிற்கான அரசு செலவினம் இரண்டிற்கும் ஒட்டுமொத்த வரி வசூல் வரம்பிற்குள் இருந்தது. இதன் மூலம் இந்தியாவின் நிதி நிர்வாகத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டும் என்ற தொழில்துறையின் எதிர்பார்ப்பு, பொருளாதார நிபுணர்கள் எதிர்பார்ப்பு உள்ளது. இந்த வரி வசூல் மூலம் நமது நிதிப்பற்றாக்குறையை 5.9% ஆகக் கட்டுப்படுத்த முடிந்ததாக ஒரு அறிவிப்பு இன்று வெளியாகும். இந்த வரி வசூல் இன்னும் சிறப்பாக இருந்தால், நிதி பற்றாக்குறையை மேலும் ஒருங்கிணைக்க முடியும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது என நேரடி வரிகளுக்கான தேசிய கவுன்சில் தலைவர் ராகுல் கர்க் தனியார் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…