புதுச்சேரி மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி புதுச்சேரி ஜிப்மர் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்கட்டமைப்பு, துறைமுகங்கள், சுகாதாரம் மற்றும் விளையாட்டு தொடர்பான பல மேம்பாட்டுப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், பல திட்டங்களை தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்,புதுச்சேரி பாரதியார் உள்பட பல கவிஞர்களின் தாய்வீடாக இருக்கிறது.
புதுச்சேரி மக்களின் வாழ்வை வளப்படுத்தும் பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.ரூ.2,426 கோடியில் விழுப்புரம் – நாகை 4 வழிச்சாலை திட்டத்தால் பொருளாதாரம் மேம்படும்.கிராமப்புற, கடலோர பகுதிகளை இணைக்க மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்.புதுச்சேரி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் தொடக்கத்தை இன்று நாம் கொண்டாடுகிறோம். இந்த படைப்புகள் பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.நமது வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு தேவை. நான்கு வழிச்சாலை அடிக்கல் நாட்டப்படுவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…