இன்பச்செய்தி..! விவசாயிகளுக்கு இனிமேல் ரூ.4,000.. அசத்தல் அறிவிப்பு.!!
பிரதம மந்திரி கிசான் யோஜனாவின் (PM Kisan Yojana) 14-வது தவணையில், விவசாயிகளுக்கு ரூ.2,000-க்கு பதிலாக ரூ.4,000 வழங்கப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு நேரடி நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த நாள் மூலம் நாட்டில் தகுதியுள்ள மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை, தலா ரூ.2000 வீதம் மூன்று தவணைகளாக ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் வெளியிடப்பட்ட நிலையில் பிஎம் கிசான் திட்டத்தின் 14-வது விரைவில் வெளியிடப்படவுள்ளது.
அந்த வகையில், பிஎம் கிசான் யோஜனாவின் 14-வது தவணையில் விவசாயிகளுக்கு ரூ.4000 உதவித்தொகை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில், பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் 13வது தவணையான ரூ.2,000 த்தை பெறாத விவசாயிகளுக்கு 14வது தவணையாக ரூ.4,000 கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த 14வது தவணையாக அளிக்கப்படும் ரூ.4,000-த்தை அனைத்து விவசாயிகளும் பெற மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது,
ஏனெனில், இது அரசாங்கத்தால் குறிப்பிடப்பட்ட தகுதிகளை உடைய விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும். விவசாயிகள் தங்கள் பெயர் மற்றும் தகுதி நிலையை அதிகாரப்பூர்வ பிஎம் கிசான் (PM Kisan) இணையதளமான https://pmkisan.gov.in/ என்பதில் விவசாயிகள் கார்னர் (Farmers Corner) கீழ் உள்ள பயனாளி நிலை (Beneficiary Status) விருப்பத்தில் விவசாயிகளின் தகவலை உள்ளிடுவதன் மூலம் சரிபார்க்கலாம்.