#குட் நியூஸ்: ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைவு – சுகாதாரத்துறை அறிவிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், ஒரு நாள் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 11,651 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு நாளில் 289 பேர் உயிரிழந்துள்ளனர். ஒருநாள் கொரோனா பாதிப்பு நேற்று 6,396 ஆக இருந்த நிலையில், இன்று 5,921 ஆக குறைந்துள்ளது.
இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை 4 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 477 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 63 ஆயிரத்து 878 ஆக குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 11,651 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 78 ஆயிரத்து 721 ஆக உயர்ந்துள்ளது.
இதுபோன்று, கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 878 ஆக அதிகரித்துள்ளது. மேலும், நாட்டில் மொத்தம் இதுவரை 1,78,55,66,940 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 24 லட்சத்து 62 ஆயிரத்து 562 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, உலகளவில் இதுவரை 44.36 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து 37.66 கோடி பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவுக்கு 60.08 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025