குட் நியூஸ்.! இந்து திருமணத்தை மசூதியில் நடத்த அனுமதி வழங்கிய முஸ்லிம்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • கேரளாவில் பிந்து என்ற பெண்ணுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.
  • அவரது பெண்ணுக்கு வரும் 19-ம் தேதி திருமணம் அங்குள்ள ஒரு மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி நடைபெற உள்ளது.

கேரளாவில் திருவனந்தபுரத்தின் காயங்குளம் நகரில் உள்ள செருவாலியில் முஸ்லிம் ஜமாத்தினரின் பழங்கால மசூதி ஒன்றுள்ளது. இதன் அருகில் ஒரு வாடகை வீட்டில் உள்ள பிந்து என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது கணவர் மாரடைப்பால் இறந்து விட்டார். இந்நிலையில், பிந்துவின் மகள் அஞ்சுவிற்கு அந்த பகுதியில் உள்ள சரத் சசி என்பவருடன் வரும் ஜனவரி 19-ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதால், ஏழ்மையின் காரணமாக மண்டபம் உள்ளிட்ட செலவுகள் பிந்துவால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், அவருக்கு பழக்கமான அலூமூத்தில் என்ற முஸ்லிம் குடும்பத்தாரிடம் மகளின் திருமணம் உதவி குறித்து பிந்து கேட்டிருக்கிறார். பின்னர் அவர் அந்த மசூதி அறக்கட்டளையின் செயலாளராக உள்ள நிலையில், பிந்து குடும்பத்திற்கு உதவி வேண்டுமென்று மசூதியில் தொழுகைக்கு வந்தவர்களிடன் கோரிக்கையை வைத்துள்ளார்.

மேலும் பிந்துவின் நிலைமை கருதி அனைவரும் மசூதி வளாகத்தில் திருமணம் நடத்த அனுமதி வழங்கினர். இதனையடுத்து வரும் ஜனவரி 19-ம் அந்த மசூதியின் வளாகத்தில் கூடாரம் அமைத்து இந்து முறைப்படி திருமணம் நடைபெற உள்ளது. அம்மசூதி ஜமாத்தின் செயலாளரான அலூமூத் கூறுகையில், தற்போது நாடு முழுவதிலும் மத சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் அதை தடுத்து நிறுத்தும் என நம்புகிறோம் என  கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

3 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

3 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

5 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

5 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

6 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

7 hours ago