மது பிரியர்களுக்கு இன்பச்செய்தி..10 நிமிடம் தான்! ஜெட் வேகத்தில் டோர் டெலிவரி.. எங்கே தெரியுமா?

Default Image

கொல்கத்தாவில் உள்ள மது பிரியர்களுக்கு 10 நிமிடங்களில் மதுவை வீட்டு வாசலில் டெலிவரி செய்யும் ஸ்டார்ட்அப் நிறுவனம்.

நாட்டில் கொரோனா தொற்று பரவலால் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கில் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டபோது, அத்தியாவசிய சேவைகள் அனைத்தும் தங்கள் வீட்டு வாசலில் வழங்கப்பட்டது. ஆனால், மதுபானங்கள் டெலிவரி செய்யப்படாததால், மது பிரியர்கள் வேதனையடைந்தனர். இந்த நிலையில் தற்போது, ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம், மதுபானத்தை எளிதாக அணுகும் வகையில் உதவ வந்துள்ளது.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம், கொல்கத்தாவில் உள்ளவர்களுக்கு, தங்கள் வீட்டு வாசலில் மதுவை டெலிவரி செய்யும் புதிய சேவையை தொடங்கியுள்ளது. மதுபான விநியோகம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு மட்டும் சரியாக இருக்காது என்றும் ஆனால் 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. Innovent Technologies Private Limited-இன் முதன்மை பிராண்டான Booozie, இது இந்தியாவின் முதல் 10 நிமிட மதுபான விநியோக தளம் என்று கூறியுள்ளது.

ஆன்லைன் மது விநியோகம் ஏற்கனவே நாட்டின் பல பகுதிகளில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நிறுவனமும் பூஸி செய்வது போல வேகமாக டெலிவரிகளை வழங்கவில்லை என்று ஸ்டார்ட்அப் கூறியுள்ளது. மேற்கு வங்க மாநில கலால் துறையின் ஒப்புதலுக்குப் பிறகு கிழக்குப் பெருநகரில் இந்த சேவை தொடங்கப்பட்டது என்றும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. Booozie என்பது நுகர்வோர் நடத்தை மற்றும் ஒழுங்கு முறைகளை முன்னறிவிக்கும் புதுமையான AI-ஐப் பயன்படுத்தி 10 நிமிட டெலிவரியுடன், அருகிலுள்ள கடையில் இருந்து மதுபானங்களை எடுத்துச் செல்லும் ஒரு விநியோகத் தொகுப்பாகும்.

இந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் கூற்றுப்படி, மதுபான விநியோகம் அதிவேகமாக இருக்கும், ஆனால் கொல்கத்தாவில் உள்ள மக்களுக்கு மலிவு விலையிலும் இருக்கும் என்றும் சந்தையில் நுகர்வோர் தேவை மற்றும் தற்போதைய விநியோகத்தில் உள்ள பற்றாக்குறையை குறைக்க மேற்கு வங்க அரசின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

எனவே, கொல்கத்தாவில் மதுபானங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்ய ஆர்வமுள்ளவர்கள் Booozie-இன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் என்றும் 10 நிமிடங்களில் மதுபானம் உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்யப்படும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்